திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூரிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதோடு திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.