மேற்கு ஆப்பிரிக்க நாடான மத்திய செனகளில் நடந்த பயங்கர விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காபிரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.