கிழக்கு சீனாவில் ஜியாங்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள நான்சாங் கவுண்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பனிமூட்டத்தின் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 22 பேர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது சீனாவில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பனிமூட்டமன நேரங்களில் வேகத்தை குறைத்து மெதுவாக செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் சீனாவில் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததால் விபத்துகள் என்பது அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.