திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 7 அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டுள்ள நிலையில் 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் பதவி வழங்கப்படும் என்றும் அவர் நாளை பதவி ஏற்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான், கா‌. ராமச்சந்திரன் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிதாக கோவி‌ செழியன், ஆர் ராஜேந்திரன் மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.