IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள். தற்போது இந்தியன் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை என்னவென்று இதில் பாருங்கள். கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு IRCTC பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டீக்கடை முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை மாற்றியது.

புதிய விதியின்படி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் தங்களது கணக்கை சரிபார்க்க வேண்டும். அதனால் சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்களது கணக்கை இன்னும் சரி பார்க்கவில்லை. IRCTC வழங்கிய விதியின் கீழ் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

IRCTC-யால் செய்யப்பட்ட மாற்றம் கோவிட் 19 தோற்று நோய் தொடங்கி பல மாதங்களாக இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டைகளை முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பொருந்தும். உங்கள் கணக்கை நீங்கள் இன்னும் சரி பார்க்கவில்லை என்றால் சரிபார்ப்பு செயல்முறையை விரைவில் முடிக்கவும். இதை செய்து முடித்த பிறகு டிக்கெட் முன்பதிவு செய்வதில் எந்தவித சிக்கலையும் சந்திக்க வேண்டியதில்லை.

IRCTC ஆப் அல்லது இணையதளத்திற்கு சென்று சரிபார்ப்பு சாளரத்தில் கிளிக் செய்யவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் ரயில் டிக்கெட் புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தினால் போதும். இங்கே கிளிக் செய்தால் மொபைலுக்கு ஓடிபி எண் வரும். அதை உள்ளிட்டு மொபைல் எண்ணை சரிபார்க்கவும்.

மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீடுகளை உள்ளிட்ட பிறகு உங்கள் ஐடியும் அதாவது உங்கள் அஞ்சல் ஐடியும் சரி பார்க்கப்படும். இந்த செயல்முறையை முடித்த பிறகு ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆகவே கூடிய சீக்கிரம் உங்களின் IRCTC கணக்கை சரிபார்க்கவும். அப்போதுதான் உங்களால் அனைத்து முறையும் எந்தவித இடையூறும் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.