உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால் உயிர் பிழைக்கிறார்கள். சமீபகாலமாகவே இந்தியாவில் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் இன்று ஹைதராபாத்தில் போலீஸ் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். அதேபோல் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு CPR செய்த பிறகு உயிர்பிழைத்தார். திருமண நிகழ்ச்சியில் ஒருவர் திடீரென மாரடைப்பால் உ உயிரிழந்தார். இந்நிலையில் ‘heartattack’ ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.