உத்தரபிரதேசம் பேரவையில் இன்று ​​சமாஜவாதி கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மிநாராயண் சௌத்ரி, மாநிலத்திலுள்ள 25 கோடி மக்களில் 14 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பிப்,.-13 ஆம் தேதி வரை மாநிலத்தில் மொத்தம் 1,75,02,198 இலவச எரிவாயு இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதோடு அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.39 மானியமும் வழங்கப்படுகிறது என்றார். உத்தரபிரதேசத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 2025ல் நடைபெறும் மகா கும்ப மேளாவின் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூபாய்.2,500 கோடியை உத்தரபிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.