உத்தரப்பிரதேசம் புலந்த்சஹார் மாவட்டத்தில் உள்ள பாசேந்துவா கிராமத்தில் அடிக்கடி சிறுத்தையால் பொதுமக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக  கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அதோடு சிறுத்தைக்காக கூண்டில் ஒரு சேவல் இரையாக வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் வனத்துறையினர் தொடர்ந்து கூண்டை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த சேவலை எடுக்க இளைஞர் ஒருவர் முற்பட்டார். இதனால் சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் அவர் சிக்கினார். அதனை தொடர்ந்து இளைஞரின் சத்தம் கேட்டு வந்த வனத்துறை கூண்டிலிருந்த நபரிடம் விசாரிக்கும்போது சிறுத்தைக்கு இரையாக வைக்கப்பட்டிருந்த சேவலை எடுக்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோவை அம்மாநில வனத் துறை வெளியிட்டுள்ளது.