திருப்பூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் மு.பி.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி  திறந்து வைத்தார்கள்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சேர்ந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா 150 அரங்குகளுடன் திருப்பூர் காங்கயம் ரோட்டில் இருக்கும் வேலன் ஹோட்டல் மைதானத்தில் நேற்று  நடந்தது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பி.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று புத்தக திருவிழாவை திறந்து வைத்தார்கள்.

இந்த புத்தகத் திருவிழாவில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்க எம்,பி சுப்பராயன், எம்.எல்.ஏ செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மேயர் தினேஷ்குமார் சிறப்புரை வழங்கினார். இதன்பின் புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த புத்தக திருவிழா தினமும் காலை 11 மணிக்கு தொடக்கி இரவு 9.30 மணி வரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.