டெல்லியில் நடந்த இரண்டு கொடூரக் கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகள், தாங்கள் கொலைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்திய பட்டன் கத்திகளை (Button Knives) ஆன்லைன் கிரோசரி ஆப்பான Blinkit மூலம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளனர். இது டெல்லி போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகத் தடை செய்யப்பட்ட இத்தகைய கூர்மையான கத்திகளை எப்படி ஒரு டெலிவரி ஆப் மூலம் விற்பனை செய்யலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, Blinkit நிறுவனம் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அந்நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளில் (Warehouses) அதிரடி சோதனை நடத்திய போலீஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான கத்திகளைப் பறிமுதல் செய்துள்ளனர். 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள், கத்திகள் போன்ற ஆபத்தான பொருட்களையும் சட்டவிரோதமாக விற்பனை செய்வது இப்போது விவாதமாகியுள்ளது.
