கர்நாடக பா.ஜ.க MLA ஆர்.சங்கர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வணிகத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடியான சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. வாக்காளர்களுக்கு வழங்க ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, 6,000 புடவைகள், 9,000 குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பரிசுப்பொருட்கள் வைத்திருந்ததற்கான காரணம் தொடர்பாக பாஜக MLA சங்கர் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது