
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்னைக்கு அமைச்சர் அன்பழகன் இருந்தார்… எடப்பாடி தலைமையில் அரசு அமைந்து மூவ் பண்ணுகிறோம் அதாவது வந்து… 2018ல் மீன்வளப் பல்கலைக்கத்திற்கு அம்மாவுடைய திருப்பெயரை வைக்க வேண்டும்.G.O 2018இல் போட்டாச்சு…. இதை சட்டமாக கொண்டு வர வேண்டும் என்றால், மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும். பிறகு கவர்னருக்கு போகணும்….
2023இல் நீங்கள் ஒரு மசோதா கொண்டு வருகிறீர்கள்… வேந்தரின் அதிகாரத்தை அரசு எடுத்துக் கொள்வதும், 1994இல் ஒரு நிலைபாடு 1996இல் ஒரு நிலைப்பாடு… 96 இல் இருந்த நிலைப்பாடு மாறி இருக்கிறது, இப்ப மாத்தி விட்டீர்கள், அது வேற விஷயம்… இப்போ போட்ட மசோதாவில் எங்கையாவது அம்மா பெயர் அதில் இருக்கிறதா ? அதுதான் எங்களுடைய கேள்வி…
எங்கயாவது அம்மா பெயர் இருக்கிறதா ? ஏன் அதில் போட்டு அனுப்ப வேண்டியது தானே…. ஏன் பசப்பு வார்த்தை ? ஏன் பாசாங்கு வார்த்தை ? தூங்குவரை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஓபிஎஸ் என்னுடைய வார்த்தை…. ஒரு மெச்சூரிட்டி இல்லாமல்… சரி வர படிக்காமல்…. பழுத்த இலையை…. குருத்து இலை பார்த்து சிரித்த மாதிரி…. இன்றைக்கு அவர் அரைவேக்காடைத்தனம் தான் உணர முடிகிறது.
2023 இல் மீன் வள கல்லூரி மசோதா தாக்கல் செய்துள்ளார்கள். அதில் ஏன் 2018 இல் போட்ட G.O-வை மென்ஷன் பண்ணி, அம்மாவுடைய பெயரை மென்ஷன் பண்ண வேண்டிதானே…. அது ஏன் நீங்கள் கொண்டு வரவில்லை ? எங்கேயுமே இல்லையே… எங்கேயாவது அம்மா பெயர் இருக்கிறதா ? எங்கேயும் இல்லை…. இல்லாத ஒரு விஷயத்தில் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்று அடிப்படையில் இன்றைக்கு இந்த அரசு நடந்திருக்கிறது, அதுதான் உண்மை என தெரிவித்தார்.