கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்தச் சீசனின் வெற்றியாளராகப் போட்டியாளர் திவ்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த மற்ற போட்டியாளர்களுக்கு இடையே நிலவிய கடுமையான போட்டிக்கு மத்தியில் திவ்யா கணேஷ் மகுடம் சூடியுள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில், சபரி இரண்டாம் இடத்தைப் பிடித்து ‘ரன்னர் அப்’ ஆகியுள்ளார். மேலும், விக்ரம் மூன்றாம் இடத்தையும், அரோரோ நான்காம் இடத்தையும் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடி வந்த திவ்யா கணேஷிற்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொலைக்காட்சியில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
