தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக திகழ்ந்தவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். கடைசியாக இவர்களது நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்பும் ஒரே நாளில் நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி வெளியாகும் போது ரசிகர்களுக்கு அது டபுள் ட்ரீட்டாக அமைந்து விடுகிறது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக இயக்குனர் தாணு அறிவித்திருந்த நிலையில் பின்னர் புது படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் தற்போது ஜனவரி 23ஆம் தேதி தெறி திரைப்படம் வெளியாகும் என தாணு அறிவித்துள்ளார். மேலும் இதே நாளில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரு திரைப்படங்களும் அப்போதே சூப்பர் ஹிட் படங்கள் என்பதால் தற்போது இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
