சர்ச்சைகளுக்கும் ஹிட் படங்களுக்கும் பெயர் போன இயக்குநர் மோகன் ஜி, இப்போது புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார். ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘பகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து அவர் தற்போது ‘திரௌபதி 2’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில், அண்ணாமலை குறித்து அவர் பேசியிருப்பது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன் ஜி, “பாஜகவில் அண்ணாமலையைத் தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. அவரிடம் சினிமா பற்றிப் பேச முடியாது என்றாலும், வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்பேன்.
நீங்களாவது அவரிடம் பேசி ஒரு கால்ஷீட் வாங்கித் தாருங்கள், நான் அவரை ஹீரோவாக வைத்து தமிழில் ஒரு மாஸ் படம் பண்ணுகிறேன்” என்று ஓப்பனாகவே கூறியுள்ளார்.
மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனக்கு ‘திரௌபதி’ படத்திலிருந்தே ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
