இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு கொடூரமான முறையில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இப்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னமும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்தவகையில் செங்கல்பட்டில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. சைதாப்பேட்டை செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று சாலவாக்கம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியதாகவும்,  இளம்பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அவர்கள் விசாரணை செய்ததில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனவும், முன்னுக்கு பின் முரணாக பல்வேறு பதில்களை கூறியதால் அந்தப் பெண் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு எஸ்.பி சுதாகர் அவரை விசாரித்தபோது அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதால் தற்போது பிரச்சனை காரணமாக ஒரு சில காரணங்களுக்காக பொய்யான ஒரு தகவலை அறிவித்ததும், யாரும் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என கூறியுள்ளார்..

தனது ஆண் நண்பரை பலி வாங்க பொய்யான புகாரளித்துள்ளார். அதாவது, திருமணத்திற்கு மறுத்த காதலனை சிக்க வைக்க நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இளம்பெண் விசாரணையின் போது பொய் புகாரளித்ததை  ஒப்புக்கொண்ட இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் 4 பேரும் செங்கல்பட்டிலேயே இல்லை என்பது தெரியவந்துள்ளது. முதலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக உண்மை தெரியவந்துள்ளது..