தமிழகத்தில் மாதாந்திர கணக்கீடு விரைவில் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி மாதாந்திர மின் கணக்கிட்டு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக இருப்பதால் இதை அமல்படுத்துவது தாமதம் ஆகின்றது.

விரைவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு மாதாந்திர மின் கணக்கீடு பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் நிலையில் இனி மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.