மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.

வகுப்பறையில் பாடம் நடத்தும் போதே ஆபாச வீடியோக்களை காட்டுவது, தவறான இடங்களில் தொடுவது உள்ளிட்ட செயல்களால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, தலைமை ஆசிரியரும் உதவி தலைமை ஆசிரியரும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் நேரடியாக மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் சென்ற மாணவிகள், புகாரில் பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருவது, உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களை இரு கோஷ்டியாக பிரிப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விடுவது, வகுப்பறைகளில் பீடி-சிகரெட் துண்டுகள் கிடப்பது உள்ளிட்ட அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் என மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தில் தெற்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.