திமுக கூட்டணியில் முதல் கட்சியாக தொகுதி உடன்பாட்டை முடித்து அறிவித்திருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவில் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன் பிறகு பேட்டி அளித்த மாநில தலைவர் காதர் மொய்தீன், எங்களது சொந்த சின்னமான ஏணியில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.