2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர். மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுக – கொ.ம.தே.க இடைய ஒப்பந்தம் கையெழுத்தானது. உதயசூரியன் சின்னத்தில்  வேட்பாளர் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

தொகுதி ஒதுக்கீடு செய்தபின் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், கொ.ம.தே.க – திமுக கூட்டணி உறுதியான கூட்டணியாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். திமுக கூட்டணி கட்சிகள் விரைவில் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்குவோம். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். நாமக்கல்லில் யார் வேட்பாளர் என்பதை கொ.ம.தே.க செயற்குழு கூடி விரைவில் அறிவிக்கும். நாமக்கல் தொகுதியில் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.