![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/YU.jpg)
ஆந்திரா தெலுங்கானாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், ஆந்திராவின் விஜயவாடா, ஜக்கையா பேட் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சத்தில் மக்கள் வீடு மற்றும் குடியிருப்புகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். சரியாக காலை 7 27 மணிக்கு 5.3 லிட்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.