பெஞ்சல் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புயலின் காரணமாக மொத்தம் 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து எம்.எல்.ஏ-க்கள் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது, புதுச்சேரி தமிழகத்தில் பெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மொத்தம் 12 பேர் இறந்துள்ளனர். தமிழகம் முதலமைச்சர் உடனடி நிதி வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறை செய்து வருகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு சார்பில் 43,993 கோடி நிதி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூபாய் 1729 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. இதை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தது வரலாற்று தவறாகும் என்று தெரிவித்தார்.