தமிழகத்தில் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக மேற்கண்ட இந்த மாவட்டங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குளிர்கால ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நோட்டீஸ் ஒன்று கொடுத்துள்ளார்.
இதில் கனமழை பெய்த பகுதிகளில் மத்திய அரசு ஆய்வுகள் நடத்த வேண்டும். பொது மக்களுக்கு ஏற்பட்ட சொத்து சேதங்களை குறித்த பார்வையிட வேண்டும். மேலும் வெள்ள சேதங்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசுக்கு ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.