
லியோ படத்திற்கான அப்டேட் கேட்ட இளைஞருக்கு மிஷ்கின் அளித்த அட்வைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லியோ படத்திற்கான ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து படத்திற்கான அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் சிலரை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்டேட் கேட்டு டார்ச்சர் செய்தும் வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களை சந்தித்த ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு,
லியோ படத்திற்கான அப்டேட் ஏதாவது கொடுக்குமாறு கேட்க, அவர் எதுவும் இல்லை என மறுத்துவிட்டு காருக்குள் செல்கிறார். இருப்பினும், விடாது ஏதாவது ஒரு தகவலாவது கூறி செல்லுங்கள் ரசிகர்களுக்காக என தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே,
டேய் கண்ணா விஜய் மாதிரி நடந்துக்கோங்க, டீசண்டா இருந்துக்கோங்க, விஜய் இனிமையான மனிதர் அவரது ரசிகர்களுக்கு அதிக பொறுப்புகள் உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
Director & Actor Mysskin about #Leo & Thalapathy Vijay @Actorvijay pic.twitter.com/CHNeuyctWj
— #LEO OFFICIAL (@TeamLeoOffcl) July 10, 2023