ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது..

ஷாருக்கான் நடித்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஜவான் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட காட்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானே தேதியை வெளியிட்டார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி ஜூலை 10ம் தேதி காலை 10.30 மணிக்கு, அதாவது இன்று நடைபெறும் என நடிகர் ஷாருக் கான் ட்விட்டரில் அறிவித்தார். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் (முன்னோட்ட கட்சி) வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், இது வெறும் ஆரம்பம் தான் என வசனம் எழுதி முன்னோட்ட காட்சியை வெளியிட்டார்.. அதேபோல ஷாருக் கானும் முன்னோட்ட காட்சியை வெளியிட்டார்..

இது வைரலாகி வருகிறது.. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னோட்டக் காட்சிவெளியானது.  இப்படத்தின்   செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும். ஜவான் படத்தின் டிரைலர் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் டாம் குரூஸ் படமான மிஷன் இம்பாசிபிள் 7 உடன் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பதானுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஷாருக்கான் படமே பிரபல இயக்குனர் அட்லியின் முதல் பாலிவுட் படமும் கூட. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன், சானியா மல்ஹோத்ரா, ரித்தி டோக்ரா, சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஷாருக் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்..

https://twitter.com/Atlee_dir/status/1678272484603478016