வாரணாசியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை குறிவைத்து ஒரு இளம்பெண் அரங்கேற்றிய நாடகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் நைசாகப் பேசி, அவரது கணக்கில் இருந்து ரூ. 20,000-ஐ தனது ஆன்லைன் கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளார். அதற்குப் பதிலாக தன்னிடம் உள்ள ரொக்கப் பணத்தை (Cash) கொடுத்துவிடுவதாக ஆசை காட்டியுள்ளார்.
Varanasi auto driver almost lost ₹20,000 after a woman convinced him to transfer the amount online, promising cash in return. She refused & threatened him—until locals intervened & forced her to return the money.
Caution: Never trust strangers with UPI transfers! pic.twitter.com/yrdoHwtRnt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 8, 2026
ஆட்டோ ஓட்டுநர் பணத்தை டிரான்ஸ்பர் செய்தவுடன், கையில் பணம் கொடுக்க வேண்டிய நேரத்தில் அந்தப் பெண் மிரட்டல் தொனியில் பேசத் தொடங்கினார். பணத்தைத் திருப்பித் தர முடியாது என அடாவடி செய்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் சத்தத்தைக் கேட்டு அங்கு திரண்ட வாரணாசி மக்கள், அந்தப் பெண்ணை சுற்றி வளைத்தனர். அவர் தப்பிக்க முயன்றபோதும் விடாமல் பிடித்து வைத்த மக்கள், ஓட்டுநருக்குச் சேர வேண்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தந்தனர்.
