பிரபல வங்கிகளில் ஒன்றாகிய பேங்க் ஆஃப் பரோடா FD எனப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி இருக்கிறது. திருத்தப்பட்டுள்ள புது வட்டி விகிதங்கள் கடந்த மே 12 (2023) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியில் கூடுதலாக 50 Basis Points-களை பேங்க் ஆஃப் பரோடாவானது வழங்குகிறது. மற்ற வங்கிகள் உடன் ஒப்பிடுகையில் பேங்க் ஆஃப் பரோடா FDக்கான வட்டி விகிதங்கள் எவ்வாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7-45 நாட்கள் வரையுள்ள முதிர்வுக் காலத்துக்கு 3 சதவீத வட்டியை வழங்குகிறது. 46-180 தினங்களில் முதிர்ச்சி அடையும் FD-களில் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 4.5 சதவீத வட்டியானது கிடைக்கும். டெர்ம் டெபாசிட் 181-210 தினங்கள் வரை இருக்கும் பட்சத்தில் 5.25 சதவீத வட்டியானது வழங்கப்படும். அதேபோன்று FD-ன் முதிர்வுகாலம் 211 நாட்களில் முதல் 1 ஆண்டுக்கும் குறைவாக இருந்தால் அதற்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாக இருக்கும்.
1-2 வருடங்கள் வரையிலான முதிர்வு காலத்தை கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்கள் வாடிக்கையாளர்களுக்கு 6.75 சதவீத வருமானத்தை அளிக்கும். அதே சமயம் 395 நாட்கள் கொண்ட Special Baroda Tiranga Plus Deposit திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டியை வழங்குகிறது. பேங்க் ஆஃப் பரோடா தன் வாடிக்கையாளர்கள் 2 வருடங்களுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்குள் இருக்கும் டெர்ம் டெபாசிட்டுகளில் முதலீடு செய்தால் 7.05 சதவீத வட்டியை பெறுவர். 3 -10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது.