திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, பிரத்யேகமான கைத்தடி, மின்சார ஷாக் கொடுக்கும் கருவிகளை சிறைத்துறை நிர்வாகம் வாங்குகிறது. சிறை அறைக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களைத் தடுக்க மின்சார ஷாக் கொடுக்கும் துப்பாக்கி உள்ளிட்ட கருவிகளும், கைத்தடிகளுமே உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்களின் போது, சில நேரங்களில் உயிர் பலிகளும் நேரிடுகிறது.

மேலும் காவலர்களுக்கும் முழு கவச உடை, தலைக்கவசம் போன்றவை வாங்கப்படுகிறது. பாலி கார்பனேட் லத்திகளையும் போலீசார் கேட்டு வாங்கியுள்ளனர். இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, 15 நாட்களுக்கு முன்பு இதுபற்றி பரிந்துரை அனுப்பப்பட்டு இப்போது பொருள்களை வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.