இந்தியாவில் வரதட்சணை வாங்குவது சட்டவிரதம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சனை கொடுக்கப்படுகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் வரதட்சணையாக 2 1/2 கோடி ரொக்க பணம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
அதில் மணப்பெண் வீட்டார் சூட்கேசில் வைத்து 2.56 கோடி ரொக்க பணத்தை வரதட்சணையாக கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சம்பிரதாயம் முறைப்படி ஒரு சடங்கிற்கு 11 லட்சம் மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு 8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது அடுத்து, பயனர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், சிலர் இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று பதிவிட்டுள்ளனர்.