பெங்களூரில் ஆட்டோ டிரைவர்களின் செயல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரில் 2 பெண்கள் தனித்தனியாக சவாரிக்காக ஆட்டோவில் ஏற முயற்சிக்கின்றனர். அதில் ஒரு பெண் இந்தி பேசுகிறார், மற்றொருவர் கன்னடம் பேசுகிறார். இந்தி பேசும் பெண்ணிடம் குறிப்பிட்ட தூரத்திற்கு ஆட்டோ டிரைவர் 300 ரூபாய் கேட்கின்றார். அதே தூரத்திற்கு கன்னடம் பேசும் பெண்ணிடம் 200 ரூபாய் கேட்கிறார். அதேபோன்று ஒரு ஆட்டோ டிரைவரிடம் இந்தி பேசும் பெண் பேச முயன்ற போது, அவர் அந்த பெண்ணை அலட்சியப்படுத்துகிறார்.

ஆனால் கன்னடம் பேசும் பெண்ணை சவாரிக்கு ஏற்றி செல்கின்றார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பயனர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஒரு பயனர் நீங்கள் ஹைதராபாத் வாருங்கள், இங்கு யாரும் எந்த மொழியையும் கற்பிக்க வேண்டும் என்று உங்களை வற்புறுத்த மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் நாம் அனைவரும் இந்தியர்கள், ஒவ்வொரு மொழிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பதிவுத்துள்ளார். இது போன்ற பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by JINAL MODI (@jinalmodiii)