செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, கிராமப்புறங்களில் இருக்கின்ற திருக்கோயில்கள்,  ஆதி திராவிடர்கள் வசிக்கின்ற திருக்கோவில்கள்.  இந்த திருக்கோவில்களுக்கு… திருப்பணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று கடந்த ஆண்டு காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு  இருந்தார்கள்..  இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு,  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன். ஒரு லட்சம் ரூபாய் என்ற நிதி போதுமானதாக இல்லை என்பதை அறிந்து ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தி,

இன்றைக்கு 5000 திருக்கோயில்களிலே திருப்பணி நடப்பதற்கு 100 கோடி ரூபாயை தந்திருப்பவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்… அதேபோல் நம்முடைய கன்னியாகுமரி தேவஸ்தானம்,  புதுக்கோட்டை அருண் தேவஸ்தானம்,  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், இந்த மூன்று திருக்கோவிலிலும் சுமார் தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 190 திருக்கோயில்கள் வருகின்றன.

அதேபோல் நம்மை புதுக்கோட்டை தேவஸ்தானத்தை எடுத்துக் கொண்டால் 270 திருக்கோயில்கள், அதை போல் கன்னியாகுமரி தேவஸ்தானத்தை எடுத்துக்கொண்டால் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் வருகின்றன. இந்த திருக்கோவில்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படுகின்ற மானியம் என்பது மிகக் குறைவாக இருந்தது.

கன்னியாகுமாரி தேவஸ்தானத்துக்கு ஒரு கோடி ரூபாய் என்று மானியம் இந்த ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இருந்தது. அதை மூன்று கோடி ரூபாயாக உயர்த்திய பெருமை மாண்புமிகு அமைச்சரை  சாரும். கடந்த ஆண்டு அந்த தேவஸ்தானத்திற்கு கூடுதலாக நிதி வேண்டும் என்கின்ற போது ஆறு கோடி ரூபாயாக அதை உயர்த்தினார்.  இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு கோடியை வழங்கி ஒரு கோடி ரூபாயாக ஆட்சி வந்த போது இருந்த மானியத்தை இன்றைக்கு 8 கோடியாக உயர்த்தியவர் மாண்புமிகு தமிழக முதல்வர்.

இது முழுவதுமே அரசின் மானியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல புதுக்கோட்டை தேவஸ்தானத்தில் இதுவரை ஒருகோடி ரூபாய் என்று தான் மானியம் இருந்தது. அந்த மானியத்தையும் மூன்று கோடியாக கடந்த ஆண்டு  உயர்த்தினார். இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு கோடியை கொடுத்து,  5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

தஞ்சாவூர் கோயில் தேவஸ்தானத்திற்கு 220 கோயில்களுக்கு நான்கு திருக்கோவில்தான் ஒட்டுமொத்தமாக வருமானம் வருகிறது. அந்த நான்கு திருக்கோயில் வருமானத்தை மற்ற கோயிலுக்கு செலவிடுகின்ற நிலையை மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன்,  கடந்தாண்டு புதிதாக மூன்றுகோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி இன்றைக்கு  திருக்கோயில்களிலே தீபம் ஏற்றுவதற்கு…. இறைவனே பக்தர்கள் நல்ல முறையில் தரிசிப்பதற்கு வழிவகை கண்டவர் நம் முதல்வர் என்று இந்த நேரத்தில் பெருமையாக சொல்கிறோம் என தெரிவித்தார்.