இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக கரீப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில் இந்த திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டும்.

இதனை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்றிதழ் மற்றும் கரண்ட் பில் ஆகியவற்றை சமர்ப்பித்தால் உங்களுக்கு சில நாட்களில் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.