விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவுடன் அலைப்பேசியில் பேசியதாக இயக்குநர் வ.கவுதமன் கூறியுள்ளார். மாவீரர் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இது குறித்து பேசிய கவுதமன், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் நலமுடன் உள்ளனர். மாவீரர் நாளான இன்று (நவ.,27) மாலை 5.30 மணிக்குமேல் துவாரகா காணொளி வாயிலாகத் தோன்றி உலகத் தமிழரிடையே உரையாற்றுவார். துவாரகாவின் வருகையை மத்திய அரசு வரவேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.