ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

அக்கம்பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்றார்கள் வந்திணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வந்துச்சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகள் மூலம் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு உறவு கைகூடி திருமணத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.