விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இன்று வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் உண்டாகும். தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.

பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். அந்தஸ்து மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றிகரமான சூழ்நிலை உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.