தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது.

பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டும். திருமணப் பேச்சுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்ள வேண்டும். கன்னி தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.