சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம்.

கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். அவர்களின் நலனில் அக்கறை கொள்வது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்பப் பொறுப்புகளை அதிகமாக சுமக்க வேண்டியதிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அமைதியாக இருந்து செயல்பட்டு காரியத்தை சாதிக்க வேண்டும். சூழ்நிலையை சரியாக கையாளுவீர்கள். குடும்பத்தினரிடம் அன்பை வெளிப்படுத்தி பேச வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கை கையாள வேண்டும். பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீங்கள் வெளிர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.