2026 புத்தாண்டை வரவேற்க நீங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் வாட்ஸ்அப்பிற்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து ஒரு வாழ்த்துச் செய்தி வரலாம்.

“உங்களுக்கான ஸ்பெஷல் நியூ இயர் கிப்ட்.. இதைக் கிளிக் செய்து பாருங்கள்” என ஒரு லிங்க் (Link) அல்லது APK ஃபைல் அதில் இருக்கும். நீங்கள் ஆர்வத்தில் அதைத் தொட்டால், அடுத்த ஒரு நிமிடத்தில் உங்கள் வங்கி கணக்கு காலியாகும் அபாயம் உள்ளது!

  • மர்மமான APK ஃபைல்: வாழ்த்துச் செய்தியோடு வரும் அந்த ஃபைலை டவுன்லோடு செய்தவுடன், உங்கள் மொபைலில் ஒரு மால்வேர் (Malware) மென்பொருள் ரகசியமாக இன்ஸ்டால் ஆகிவிடும்.

  • கட்டுப்பாட்டை இழக்கும் மொபைல்: இந்த மென்பொருள் உங்கள் கேலரி, மெசேஜ்கள் மற்றும் கான்டாக்ட் லிஸ்ட்டை ஹேக்கர்களின் கைக்குக் கொண்டு செல்லும்.

  • OTP திருட்டு: நீங்கள் வங்கிப் பரிவர்த்தனை செய்யும்போது வரும் OTP எண்ணை, உங்களுக்கே தெரியாமல் திருடி, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் அபேஸ் செய்துவிடுவார்கள்.

  • அந்நிய லிங்க்குகளைத் தவிர்க்கவும்: அறிமுகமில்லாத எண்கள் அல்லது குழுக்களில் வரும் விசித்திரமான லிங்க்குகளைக் கிளிக் செய்யாதீர்கள்.

  • APK ஃபைல்களைத் தொடாதீர்கள்: வாழ்த்துச் செய்திகளைப் பார்க்க எந்தவொரு ஆப்பையும் (App) பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • பிளே ஸ்டோர் மட்டும் போதும்: எந்த ஒரு தேவையென்றாலும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் மட்டுமே ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யுங்கள்.

  • பாதுகாப்பு வசதி: வாட்ஸ்அப்பில் ‘Two-step verification’ வசதியை உடனடியாக ஆன் (ON) செய்து கொள்ளுங்கள்.