இன்றைய டிஜிட்டல் உலகில் எங்கு எதை பார்த்தாலும் வீடியோ எடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் எடுக்கப்பட்ட ஒரு விசித்திரமான வீடியோ தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது.
அங்குள்ள ஒரு சாலையில் விளம்பர பலகை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உயரமான இரும்பு கம்பியின் மேல் ஒரு இளைஞர் ஏறி நிற்க, கீழே இருந்த போலீஸ்காரர் அவரை கீழே இறங்குமாறு லத்தியால் தட்டும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
😭😭? pic.twitter.com/7fr5H5tbjf
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 3, 2026
அந்த இளைஞர் அடியில் இருக்கும் போலீஸ்காரரின் அடிக்கு பயந்து எகிறி எகிறி மேலே ஏறுவதும், லத்தியால் தட்டும்போது ஒருவிதமான ‘ஜிம்னாஸ்டிக்’ வித்தைகளை காட்டுவதும் பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன போலீஸுக்கும் பள்ளிக்கும் இடையிலான விளையாட்டா?” என்றும், “அப்படியே ஸ்பைடர் மேன் போலவே ஏறிட்டாரே!” என்றும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வரும் இந்த வீடியோ, இன்று இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
