குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் மிகக்கோரமான லிப்ட் விபத்து ஒன்று நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு இளைஞர் லிப்ட்டில் ஏறுவதற்காக கதவைத் திறந்து ஒரு அடி எடுத்து வைத்தபோது, லிப்ட் பெட்டி வராத நிலையில் எதிர்பாராதவிதமாக அதன் ஆழமான பள்ளத்திற்குள் (Duct) விழுந்துள்ளார்.

அவர் சுதாரிப்பதற்குள் லிப்ட் பெட்டி அவர் மீதே இறங்கியதால், சுமார் 25 நிமிடங்கள் அந்த இளைஞர் மரணப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

லிப்ட் பெட்டியின் அதிக கனம் காரணமாக அவரால் உதவிக்குக் கூட கத்த முடியாத நிலையில், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிப்ட்டை முறையாகப் பராமரிக்காததே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், அலட்சியமாக இருந்த பராமரிப்பு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.