உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவின் ஃபாலன் கிராமத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு அதிசயப் பாரம்பரியம் மீண்டும் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில், சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பி எரிந்த ஹோலிகா தஹனம் தீப்பிழம்புகளுக்கு நடுவே, சஞ்சு பாண்டா என்ற பக்தர் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.
#WATCH | Mathura, UP: Following a very long tradition, a person portraying Prahlad walks through the Holika pyre at Phalen village.
Sanju Panda, who walked into the pyre, says, “…The preparation for this starts from Basant Panchami to Holika Dahan… At that time, attachment… pic.twitter.com/nzBKyciEG5
— ANI (@ANI) March 3, 2026
இதற்காகக் கடந்த 45 நாட்களாகக் கடும் விரதம் மேற்கொண்ட அவர், நெருப்பிற்குள் நுழையும்போது தனக்கு எவ்வித வெப்பமும் தெரியவில்லை என்றும், இறைவன் தன் முன்னே செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் சிலிர்ப்புடன் தெரிவித்துள்ளார்.
சுமார் 5,200 ஆண்டுகள் பழமையான இந்தப் பாரம்பரியத்தைக் காண வெளிநாட்டுப் பயணிகளும் குவிந்தனர். அறிவியல் அறிஞர்களுக்கு இது ஒரு புரியாத புதிராக இருந்தாலும், இன்றும் ‘பக்த பிரகலாதன்’ லீலைகள் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.
