இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் களத்தைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து உலகத்தையே அதிர வைத்துள்ளார்.
தற்போது மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 3 கோடி (30 மில்லியன்) சந்தாதாரர்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஒப்பிடுகையில், அவரை விட ஏழு மடங்கு அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று மோடி முதலிடத்தில் உள்ளார்.
இதுமட்டுமின்றி, கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 கோடிப் பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையையும் மோடி பெற்றிருந்தார்.
டிஜிட்டல் தளங்களில் மக்கள் அளிக்கும் இந்த ஏகோபித்த ஆதரவு, சர்வதேச அளவில் மோடியின் செல்வாக்கு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
