மதுராவில் உள்ள ஃபாலேன் கிராமத்தில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது அறிவியலால் விளக்க முடியாத ஒரு மிராக்கிள் நடந்துள்ளது. சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு பக்த பிரகலாதனை எரிக்க முயன்ற அதே இடத்தில், இன்றும் அந்தப் பாரம்பரியம் உயிர்ப்புடன் கடைபிடிக்கப்படுகிறது. இந்த முறை சஞ்சு பண்டா என்ற நபர், கொழுந்துவிட்டு எரியும் 30 அடி உயர ஹோலிகா நெருப்பு பிழம்புகளுக்கு நடுவே எந்தவித பாதிப்பும் இன்றி சாதாரணமாக நடந்து வந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
சுமார் 20 அடி நீளம் கொண்ட அந்தத் தகிக்கும் தணல் பாதையை அவர் கடந்த போது, ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்த அதிரடி சாதனை என்பது வெறும் ஒரு நிமிடத் துணிச்சல் மட்டுமல்ல, இது 45 நாட்களின் கடுமையான தவத்தின் பயன் என்று சஞ்சு பண்டா கூறுகிறார். வசந்த பஞ்சமி முதலே அன்ன ஆகாரத்தைத் தவிர்த்து, குடும்ப பாசத்தைத் துறந்து, வெறும் பழங்களை மட்டுமே உண்டு அவர் இந்த விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
#WATCH | Mathura, UP: Following a very long tradition, a person portraying Prahlad walks through the Holika pyre at Phalen village.
Sanju Panda, who walked into the pyre, says, "…The preparation for this starts from Basant Panchami to Holika Dahan… At that time, attachment… pic.twitter.com/nzBKyciEG5
— ANI (@ANI) March 3, 2026
ஹோலிகா தகனத்திற்கு முன்பாக புனிதக் குளத்தில் நீராடி இறைவனை வேண்டியவர், அந்தத் தகிக்கும் நெருப்புக்கு நடுவே சென்றபோது தனக்கு ஒரு தெய்வீக வழிகாட்டுதல் கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இத்தனை பெரிய நெருப்பு வளையத்திற்குள் சென்றும் அவருக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படாதது, அந்தப் பகுதியினரிடையே ஈடு இணையற்ற பக்தியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
