உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பட்டேல் நகர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை, ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
அந்த மாணவிக்குக் கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த அந்த கும்பல், பிறகு ஓடும் காரிலேயே வைத்து அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதன் பிறகு, மாணவியை மிக மோசமான நிலையில் சாலையோரம் வீசிச் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை மீட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டேராடூன் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
