செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் பிரச்சாரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. பிஜேபியில் தேர்தல் அறிக்கை எழுதுற வேலையும் ஆரம்பிச்சிடுச்சு. முதல் கட்டமாக தேர்தல் தமிழ்நாட்டில் இருப்பதால்,  தீவிரமா பிரச்சாரம் நடந்துகிட்டு இருக்கு. இந்த சந்தர்ப்பத்தில் விக்சிட் பாரத் அம்பாசிடர் யுனிவர்சிட்டி மாணவர்களுடன் பேசுவதற்கான ஒரு ப்ரோக்ராம் ஒன்னு தனியார் குரூப் நடத்திட்டு இருக்காங்க. அதுல சில பேரை இன்வைட் பண்றாங்க.

இது போல அழைப்பிதழ் எனக்கு கிடைச்சதுனால ஒரு தடவை அசாம் போயிருந்தேன். ஐஐடி கவுகாத்தியில பேசுறதுக்கு,  ஐஐடி கவுகாத்தி சுற்றுப்புறத்தில் இருக்கிற காலேஜ் எல்லாத்தையும் கூட்டிருந்தாங்க. இப்ப இங்க கூட்டிட்டு இருக்காங்க. அதனால இன்னைக்கு இங்கு வந்து இருக்கேன். நடுவுல ரெண்டு, மூணு இடத்துல கேண்டிடேட்க்கு  தேர்தல்  பிரச்சாரம் செய்ய நான் போகின்ற போது…..

திருவனந்தபுரத்தில் ராஜு சந்திரசேகரோட தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிருந்தபோது,  அங்கேயும் சில மாணவர்களை  ஒரு கூட்டத்துல சந்திக்கிறதுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதே போல சந்தர்ப்பத்த்தில் தான் நான் இன்னைக்கு இங்க வந்து இருக்கேன்.

தேர்தல் விவகாரத்தில் தான் கச்சத்தீவை பாஜக கையில் எடுத்துள்ளது என்ற கேள்விக்கு செய்தியாளிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இல்லைங்க…  தேர்தலுக்கும் – ஒரு நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான விஷயத்துக்கும்,  ஒரு இறையாண்மை சம்பந்தப்பட்ட  விஷயத்துக்கும் தேர்தல் தான் தேவைன்னு இல்லைங்க. இந்த விஷயத்துல எப்ப வேணா?  எங்க வேணா ? பேசலாம்…  நம்ம நாட்டின் இறையாண்மை,  நம் நாட்டினுடைய நாட்டின் உரிமை அதனால் தான் கச்சத்தீவு விவகாரம் கையில்  எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.