தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் 2 சிறுமிகள் மட்டுமே சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவர்கள் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை. இதேபோன்று சிறுமிகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்ட தகவலிலும் உண்மை இல்லை. 4 குழந்தை திருமணங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் அது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ரவி சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.