RCB அணிக்கு ஏராளமான பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தாலும் இதுவரை ஒரு தடவை கூட கோப்பையை வென்றதே கிடையாது. கடந்த 17 வருடங்களில் இதுவரை 9 முறை பிளே ஆப் வாய்ப்பை பெற்றுள்ள RCB  அணி மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடியும் தோல்வியை தான் சந்தித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் . இந்த நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன், விராட் கோலி ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் .

அந்த அணிக்காக இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். இருப்பினும் ஒரு அணியாக அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்கள். விராட் கோப்பை வெல்ல தகுதியானவர் .எனவே அவர் ஆர்சிபி அணியை தவிர வேறு அணிக்கு சென்றால் நன்றாக இருக்கும். ஒருவேளை அந்த அணி டெல்லியாக இருந்தால் அவருக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.