RCB அணிக்கு ஏராளமான பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தாலும் இதுவரை ஒரு தடவை கூட கோப்பையை வென்றதே கிடையாது. கடந்த 17 வருடங்களில் இதுவரை 9 முறை பிளே ஆப் வாய்ப்பை பெற்றுள்ள RCB  அணி மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடியும் தோல்வியை தான் சந்தித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் . இந்த நிலையில் RCB ரசிகர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் உருக்கமாக பேசி உள்ளார்.

ஆர்சிபி என்றாலே அதன் ரசிகர்கள் தான். அவர்களை தாண்டி என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு முக்கிய பங்கு என்றாலும் அதன் ரசிகர்கள் அதைவிட முக்கிய பங்காக இருக்கிறார்கள். இவர்களால் தான் 2022 உலகக்கோப்பை அணியில் நான் இடம் பெற்றேன். அதை ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.