குவாலிபயர் 2 வெற்றிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் அளித்துள்ள பேட்டியில், எங்களுடைய அணிக்கு என்று ஒரு தனி வைப் உள்ளது. சீசனின் தொடக்கத்திலிருந்து இறுதிப் போட்டியில் விளையாடுவதை எங்களுடைய இலக்காக இருந்தது. இப்போது அதனை எட்டி விட்டோம்.

சீசன் முழுக்கவே எங்களின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளார்கள். ஷாபாஸ் அகமத்தை இம்பேக்ட் பிளேயராக களமிறக்க வேண்டும் என்று ஐடியாவை கொடுத்தது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தான் . அதற்கு ஏற்ப அவர் சிறப்பாக விளையாடினார் என்று கூறியுள்ளார்