2023 ஆம் வருடம் ஐபிஎல் தொடரின் பொழுது லக்னோ -பெங்களூர் அணிக்கு இடையான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே கடும் முதல் போக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக லக்னோ அணியின் ஆலோசகராக அப்போது இருந்த கௌதம் கம்பீரோடு விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது கடந்த வருடம் ஐபிஎல் தொடரின் பொழுது மிகப்பெரிய விவாதமாக மாறியது. விராட் கோலி எப்போதும் தன்னுடைய கோபத்தை மைதானத்தில் வெளிக்காட்டுவதை குறைப்பது இல்லை.

இந்த சூழலில் தற்பொழுது மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் எம்எல்சி தொடரில் டெக்சா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியின் மற்றும் ஒரு வெர்ஷனாக பார்க்கப்படும் இந்த தொடரில் இவர் அணியில் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து சென்னை அணியும் இவர் இடம் பெறுவாரா என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. சென்னை – பெங்களூர் அணிகள் பரம எதிரியாக பார்க்கப்படும் நிலையில் இந்த முக்கிய  முடிவை சென்னை அணி எடுக்குமா என்பது கேள்விக்குறியானது தான்.